நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை –ரணில்

187 0

நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை, அவ்வாறு இருப்போர் விலக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

கடந்த அட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

அட்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஊடகங்கள் மூடி மறைத்தன.

ஆனால் நல்லாட்சி அரசினால் பெற்று கொடுத்த ஊடக சுதந்திரத்தின் பின்னர் எம்மை தாக்கி செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் நான் ஊடக நிறுவனங்களுக்கு நெருப்பு வைக்கவில்லை.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் நீதிபதிகள் அடங்கிய சுயாதீன குழு ஒன்றை ஸ்தாபித்து விசாரணை ஆரம்பித்துள்ளோம்.

அதே போல உமா ஓயா திட்டம் தொடர்பில் விசாணை குழு ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். இதற்கு ஒன்றினைந்த எதிரணியினரின் ஒத்துழைப்பையும் எதிர்பர்க்கின்றோம். நல்லாட்சியில் பொலிஸ், நீதிமன்றம், அரசதுறை மற்றும் ஊடகம், அமைச்சர்கள் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Leave a comment