யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் கைது!

314 0
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸார் மீது கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஏற்கனவே ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment