வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பிணையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள் முடிவெடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் தலமைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பினையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள் முடிவெடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் தலலைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதாவது வட மாகாண சபையில் தற்போது நிலவும் சர்ச்சைகள் தொடர்பில் ஓர் தீர்வு எட்டும் முகமாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்று முன்தினம் கூட்டமைப்பின பங்காளுக் கட்சிகள் சகிதம் கூட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பங்கு கொண்டிருந்த முதலமைச்சர் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழான முதலமைச்சரின் உருத்தில் விட்டுக்கொடாத தன்மையுடனேயே கருத்துரைத்து செயல்பட்டதன் காரணமாக புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த எவரும் பங்கு கொள்வதில்லை என்ற தீர்மானித்தை எட்டியுள்ளதோடு குறித்த தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் செயல்குழுவிற்கும் கூட்டமைப்பின் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் இன்றைய நிலையில் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளான புதிய அரசியல் யாப்பு , காணாமல்போனோர் விடயம் , நில விடுவிப்பு , கைதிகள் விடுதலை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளின் மத்தியில் நாம் தொடர்ந்தும் அமைச்சரவை மாற்றத்தை பேசு பொருளாக மாற்றாது முழுமையாக ஒதுங்கியிருக்கவே விரும்புகின்றோம். அவ்வாறு ஒதுங்கியுள்ள சந்தர்ப்பத்திலும் மக்களின் பிரச்சணைகளாக மேற்கூறிய விடயங்களில் முழுமையான ஒத்துழைப்பும் கிட்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது.