தொண்டராசிரியர்களாக நியமனம்பெற்றோர் தற்போது பணியில்

248 0

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  1953 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றபோதும்  இதில் தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்றோர்   446 பேர் தற்போதும் பணியாற்றுவதாக மாவட்ட கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பணியில் உள்ள  1953 ஆசிரியர்களில்   தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்று ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டவர்கள் மட்டும்   446 பேர் தற்போதும் இந்த மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அதிகமானோர் தொண்டராசிரியர்கள் படியாற்றும் மாவட்டமாக எமது மாவட்டமே உள்ளது. இவ்வாறான நிலையில் மாவட்டத்தின் கல்வி நிலையை எவ்வாறு உயர்த்த முடியும்.
கல்வி நிலை பின்னடைகின்றது என கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகளே கடந்த காலத்தில் இவ்வாறு அதிகமானோர் தொண்டராசிரியர்களாக உள்நுழையவும் காரணமாகவும் இருந்தனர். ஆனால் தற்போது இதற்கு மாறாக குரல் எழுப்புகின்றனர். இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களிற்கான நேர்முகத்தேர்விலும் கிளிநொச்சியில் இருந்து மேலும் அதிகமானோர் நேர்முகத் தேர்விற்கு தோற்றியுள்ளனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும்  340பேர் நேர்முகத் தேர்விற்கு தோற்றியுள்ளனர். இந்த நிலமை தொடர்ந்தால் இனி வரும் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த ஆசிரியர்களில் 45 வீதமானவர்கள் தொண்டராசிரியர்களாகவே அமையப்போகின்றனர். அவ்வாறானால் எந்த வகையில் மாவட்டத்தின் கல்வி நிலமை அமையவுள்ளது என்ற அச்சம் சூழ்கின்றது. என்கின்றனர்

Leave a comment