டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் போராட்டம்

323 0
கடன் ரத்து, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தினமும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்றுமுன்தினம் உடலில் சேறு பூசி போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று 22வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உடலில் இலை, தழைகளை கட்டியபடி ஆதிவாசிகள் போல ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
இதில் சிலர் மனித மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்க விட்டபடி கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

Leave a comment