ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் ரக்ஷாபந்தனை விமர்சையாக கொண்டாடினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் ரக்ஷாபந்தனை விமர்சையாக கொண்டாடினர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் ரக்ஷாபந்தன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி
விடுவார்கள். ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சகோதரர்கள் மகிழ்வார்கள்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தரைமட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரம் உள்ள லடாக் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன், உள்ளூர்
பெண்கள் ரக்ஷாபந்தனை கொண்டாடினர்.
பாதுகாப்பு படை வீரர்களை தங்களது உடன் பிறந்த சகோதர்களாக கருதி அவர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிய மாணவிகளுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

