எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதையே மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என வைகோ தெரிவித்தார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் வைத்து நிருபர்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களை எல்லாம் பாரதிய ஜனதா கட்சி அழித்துவிட்டது.
தமிழர் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றை நாசப்படுத்திவிட்டது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் கியாஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவுக்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்துக்காக தமிழகத்தை பாழ்படுத்த திட்டமிட்டு உள்ளது என குற்றம் சாட்டுகிறேன்.
அங்குலத்துக்கு அங்குலம் நாங்கள் எதிர்ப்போம். திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என்று பாரதிய ஜனதா கட்சி கணக்கு போடுகிறது. அது ஒரு நாளும் நடக்காது எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

