வெடிகுண்டு மிரட்டல் – தாமதமானது ஏர் இந்தியா விமானம்

459 0
ஜோத்பூர் சிவில் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவல் விமான பணத்தை மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதும், ஏர் இந்தியா பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர்.
முழுமையான சோதனை நிறைவுற்றதும் விமானம் டெல்லி புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்கள் அவரசமாக விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது.
எனினும் சோதனையில் தகவல் பொய்யானது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment