சென்னை – பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில்இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலியாகினர்.
இரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் என்னும் இடத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் ஒன்று பயணித்துக் கொண்டித்த வேளை, மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க காரை சாரதி அந்த இடத்தில் உள்ள வழியாக எதிர்திசையில் செல்லும் சாலைக்கு திருப்பினார்.
எனினும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதிவிட்டு கார் சென்னை-பெங்களூரு ரோட்டில் திரும்பியது.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் ஒன்று அதன் மீது பயங்கரமாக மோதியது.
அடுத்த வினாடி பெங்களூரு நோக்கி சென்ற மற்றொரு காரும் விபத்தில் சிக்கிய கார்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் விபத்தில் சிக்கிய கார்களின் முன்பகுதி நொறுங்கின.
இந்த விபத்தில் சிலர் கார்களுக்குள்ளேயே இறந்து கிடந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் 5 பேர் இறந்தனர்.
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தவரும் உயிர்இழந்தார்.

