ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சரி புல் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மிர்ஸா ஒலங் என்ற பகுதியை அண்டிய பகுதியில் இருந்த பாதுகாப்பு சோதனை சாவடியை இளக்குவைத்து கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர குறித்த பகுதியில் உள்ள 30 க்கும் அதிகமான வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலின் போது ஆப்கன் பாதுகாப்பு படையை சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை தலிபான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில காலங்களாக அதிகரித்துள்ளது.
தினசரி இடம்பெறும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களால், இந்த ஆண்டின் முதல் பாதியில் மாத்திரம் 1662 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 3ஆயிரத்து 581 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

