இஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகங்களை மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அல்ஜசீரா தொலைக்காட்சி மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டிவிடுவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலேம் நகரில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் அந்த தொலைக்காட்சியின் பங்கு இருந்ததாக பிரதமர் நேதான்யாஹூ குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அல்ஜசீரா இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் முக்கிய கருவியாக செயல்படுவதாக பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஒருவரும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

