அலெப்போ மக்களுக்கு உதவுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

286 0

160807004126_aleppo_after_siege_break-out_celeberation_512x288_afp_nocreditசிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் உள்ள பொது மக்களுக்கு உதவுமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.

அவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக, அங்கு பணியாற்றுகின்ற வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் 29 பேர் கொண்ட வைத்தியர்கள் குழு ஒன்று, ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அலெப்போ பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற வான் தாக்குதல்களால் பல பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அங்கு பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட வலையம் ஒன்றை அறிவிக்குமாறு வைத்தியர்கள் ஒபாமாவிடம் கோரியுள்ளனர்.