நலத்திட்ட நிதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் கோரிக்கை

359 0

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் இணையம் மற்றும் பேரிணையம் ஆகியவற்றில் இருந்து விலகுவது தொடர்பாக உடனடியாக இணையம் மற்றும் பேரிணையம் ஆகியவற்றின் பொதுச்சபைகளைக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு கோரி குறித்த
இணையங்களுக்கு கிளிநொச்சி மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளர் கடிதம் மூலம் கோரி அதன் பிரதியினை தங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் இருந்து விலகுவதாக சங்கத்தின் 18.08.2016 ஆம் திகதிய 04 ஆம் இலக்க பொதுச்சபைத்
தீர்மானத்திற்கமைவாக சங்க அங்கத்தவர்களினதும்   பணியாளர்களினதும் நிதியையும்  கணக்கு விபரங்களையும் தந்துதவும்படி தங்களுக்கு அறியத்தந்துள்ளனர். எனவே  சங்க உப விதி 6 7 ;4இற்கு அமைவாகஉறுப்புரிமைச் சங்கத்தின் தனி உறுப்பினர்களுக்கான நல உருத்துகள் நிதிப்பங்களிப்புகள் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல்கள் எதுவுமின்றி தொடர்ந்து ஆற்றுப்படுத்தலிற்கான கடப்பாட்டினை தங்களுடைய பேரிணையமானது கொண்டிருத்தல் வேண்டும். எனவே இவர்களுடைய கணக்குகள்  கொடுப்பனவுகள் தொடர்பாக தங்களதுபொதுச்சபையைக் கூட்டி இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக்,கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர் மற்றும் பணியாளர்களது நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி  கடந்த 10.07.2017 அன்று கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார். ஒரு மாதகாலத்தை எட்டுவதற்கு இன்னும் சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன.

 எனவே  தொடர்ந்தும் எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம்தாழ்த்தப்படுமாக இருந்தால் மீண்டும் சங்கத்தின் அங்கத்தவர்கள்ப ணியாளர்கள் ஆகியோர் ஒன்றுதிரண்டு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் மேலும்
தெரிவித்தார்.

Leave a comment