யாழ்.கோண்டாவில் பகுதியில் 12 இளைஞர்கள் கைது!

333 0
யாழ்.கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று  மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
கோண்டாவில்  பிரதேசத்தில் வீதிச் சோதனை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் தேசிய அடையாள அட்டைப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் . இதன்போது திருநெல்வேலிப் பகுதியில் படிமுடித்து ஓர் வாகனத்தில் பயணித்த இளைஞர்களிடம் தேசிய அடையாள அட்டை பரிசீலிக்கப்பட்ட சமயம் சிலரிம் அடையாள அட்டை இன்மை காரணமாக 10 பேரும் மேலும் இருவருமாக மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டகோது குறித்த இளைஞர்களை விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அறிக்கையின் பின்பே விடுவிக்க முடியும் எனத் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித்தனர்.

Leave a comment