மன்னார் – அடப்பன் பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட போர்க்கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மில்லிமீற்றர் 81 ரக மோட்டார் குண்டுகள் நான்கும் , மில்லிமீற்றர் 60 ரக மோட்டார் குண்டுகள் மூன்றும் மற்றும் துப்பாக்கிகள் சிலவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த போர் உபகரணங்கள் கடந்த யுத்தக்காலத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டவை என காவற்துறை தெரிவித்துள்ளது.

