கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் – அமைச்சர் ஜெயக்குமார்

265 0

கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தமிழக மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசைப் பொறுத்தவரை கச்சத்தீவை மீட்பதே இலட்சியமாகும்.

இந்த பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்கப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நீலப்புரட்சி என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த திட்டத்துக்கு முதல் கட்டமாக மத்திய அரசு 500 கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துவரும் 3 முதல் 6 மாதங்களுக்குள் படகுகள் இந்த ஆழ்கடல் படகுகளை கட்டும் திட்டம் நிறைவுசெய்யப்படும் எனவும் அமைச்சர் டி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 139 படகுகளில் 39 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த படகுகளை மீட்டு தமிழகம் கொண்டு செல்ல சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டி ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment