அரசியல்வாதிகள் பொது நோக்கிற்காக செயற்படவில்லை – அஸ்கிரிய பீடம்

12933 280

இலங்கையின் அரசியல்வாதிகள் பொது நோக்கிற்காக செயற்படாததின் காரணமாகவே நாடு அழிவினை எதிர்நோக்குவதாக பௌத்த மதத்தின் உயர் மீடமான அஸ்கிரிய பீடத்தின் உதவிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்றைய தினம் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் இலக்குகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று இல்லை.

அரசாங்கங்கள் மாறுவதற்கு ஏற்ப கொள்கைகள் மாற்றமடைந்துவருகின்றன.

இதனால் நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தேரர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் கட்சியின் கோணத்திலேயே அனைத்தையும் காணும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அதனால் நாட்டுக்கு பெரும் பாதிப்புக்கள் இடம்பெற்று வருவதாக தேரர் குறிப்பிட்டார்.

எனவே, அரசியல் கட்சிகள் இந்த நிலையை மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என நாரம்பனாவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment