யாழில் நடக்கும் திடீர் கைதுகளின் பின்னணி என்ன?

1502 0

ஐரோப்பிய ஒன்றியத்தால் கடந்த 2006-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.

விசாரணையின் போது ‘2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கியது.

இதனை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கி கடந்த ஜூலை 26 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டிற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த வன்முறை செயலிலும் ஈடுபட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படாததால் தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எனவே, வன்முறையில் ஈடுபடாமையினால் தடை நீக்கப்படும் என்பதனை கருத்தில் கொண்ட சிறிலங்காவின் நல்லாட்சி எனப்படும் மைத்திரி அரசு அவசரம் அவசரமாக யாழில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அரச புலனாய்வாளர்களால் அப்பாவி தமிழ் இளைஞர்கள் பகடகாய்களாக பயன்படுத்தபடுகிறார்கள். குறிப்பாக வடக்கில் இடம் பெறும் வன்முறைகளின் பின்னணியில் அரச புலனாய்வாளர்களே செயற்படுகின்றார்கள் என்பது நிதர்சனம்.

வன்முறையாளர்கள் என கைது செய்யப்படுபவர்கள் முன்னாள் போராளிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் புலனாய்வாளர்களில் செயற்பாடு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் போராளிகள் என கருதப்படும் சிலர் ஈழச்செயற்பாட்டாளர் என்ற மூக மூடிக்குள் செய்படுகின்றார்கள்.

எனவே ,தளத்திலும் புலத்திலும் புல்லுருவிகள் புத்தீசல் போல் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டனர். நரிகளும் தம் உடலில் வரிகள் இட்டுள்ளன என்பதே தமிழ் இனத்தின் சாபக் கேடு.

 

 

Leave a comment