பல்கலைக்கழக பாடநெறிகள் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்

4384 0

2016, 2017ம் கல்வியாண்டுக்கான பாடநெறிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.

அந்தக் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக 71 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தார்கள். இவர்களில் 29 ஆயிரத்;திற்கு மேலான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பொறுப்பில் இயங்கும் 14 பல்கலைக்கழகங்கள், மூன்று வளாகங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் 109 பாடநெறிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாண்டு புதிதாக நான்கு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதென பல்கலைககழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.

இதேவேளை 2016ம், 2017ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்ததன் பின்னர் முதற்சுற்று வெற்றிடங்களை நிரம்பும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போது இரண்டாம் சுற்று வெற்றிடங்கள் நிரம்பப்படுகின்றன. ஒவ்வொரு பாடங்களுக்காகவும் பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விபரங்களை அடுத்த மாதம் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பப்படும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment