ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை

4584 17

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கோரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. இந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாகவே  பதவியை விலகுமாறு பிரதமரும், ஜனாதிபதியும் கோரியுள்ளனர்.

பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள  நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் ரவி கருணாநாயக்க தொடர்பில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பதவி விலகுமாறு ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளனர். எனினும், இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் கருணாநாயக்க சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment