கேப்பாப்புலவு இராணுவ தலைமையகத்தை அகற்றுகிறது அரசாங்கம்? – ஆங்கில நாளிதழ்!

4455 19

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தினை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பிக்கவுள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதன் மூலம் பொதுமக்களுக்கான 111 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இராணுவத் தலைமையகத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வுஅமைச்சினால் இராணுவத்தினருக்கு 48 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment