ஹிலரியுடன் பொது விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டிரம்ப்

376 0

coltkn-07-21-fr-04153728495_4566404_20072016_mss_cmyஅமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி கிளின்டனுடனான பொது விவாதத்தை, தாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தம்மை பொருத்தவரை எனக்கு மூன்று விவாதங்களில் பங்கேற்க விருப்பம் உள்ளது.

எனினும் அமெரிக்க சட்டங்கள் இதற்கு அனுமதி அளிக்காது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் ஹிலரியைக் காட்டிலும் தாம் முன்னிலையில் உள்ளதாகவும்,  பொது விவாதத்திலும் ஹிலரியைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவேன் என்பதில் தமக்கு  நம்பிக்கை உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைப் பொருத்தவரை பொது விவாதங்களே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களுக்கான பொது விவாதங்கள் நியூயார்க் நகரில் செம்டம்பர் 26ஆம் திகதியும், சென்ட் லூயிசில் அக்டோபர் 9ஆம் திகதியும், துணை ஜனாதிபதிக்கான பொது விவாதம் வேர்ஜீனியாவில் அக்டோபர் 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.