வடக்கு மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் கேள்வி

318 0

FotorCreated-492வடக்கு மாகாண மீள் குடியேற்ற செயலணி தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசி;ங்க, இந்த செயலணி அமைச்சரவை உபக்குழு என்ற அடிப்படையில், மூன்று அமைச்சர்களை கொண்டு அமைந்துள்ளது.
இந்த செயலணியில் வட மாகாண சபையின் செயலாளர் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த மூவரடங்கிய குழு, தேவை ஏற்படும் போது, வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றத்தை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டது.
எனினும், இதற்கு ஒப்பான பணிகளை வடக்கு மாகாண முதலமைச்சரும், சபையின் அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, அவர்களின் பணிகளின் இடையூறை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே மூன்று அமைச்சரவை அமைச்சர்களை கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டது.
அத்துடன், அமைச்சரவை குழுவுக்கு உதவும் வகையில் வடமாகாண பிரதம செயலாளரும் குழுவின் பணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்தாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.