அவன்காட் நிறுவனத்தின் தலைவர்மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இணைப்பதிகாரிக்கும் எதிராக சீராய்வு மனு

300 0
355 லட்சம் ரூபாவை கையூட்டலாக பரிமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இணைப்பதிகாரி மேஜர் ஜெனரால் பாலித்த பெர்ணாண்டோவுக்கு எதிராக சீராய்வு மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்றில் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
கடற்படையின் கீழ் கடல்பாதுகாப்பு நடவடிக்கைகளை அவன்காட் நிறுவனத்திற்கு கையளிப்பதற்காக குறித்த 355 லட்சம் ரூபாய், கையூட்டலாக வழங்கப்பட்டதாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேல்நீதிமன்றில் 47 குற்றச்சாட்டுகளுடனான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு இது தொடர்பில் 30 சாட்சிகள் மற்றும் 55 ஆவணங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

Leave a comment