புத்தளம் தொடக்கம் கொழும்பு – காலி – ஹம்பாந்தோட்டை ஊடாக கல்முனை வரையான கடற்பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது , குறித்த கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , மற்றைய கடற்பகுதிகளிலும் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் எனவும் , இதன் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் சார் சமூகத்தை கோரியுள்ளது.

