இலங்கை வான்படைக்கு 8 தாக்குதல் வானூர்திகள்

338 0

Evening-Tamil-News-Paper_36470758915இலங்கை வான்படைக்காக 8 தாக்குதல் வானுர்திகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு  மற்றும் கடல் வலய பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கொள்வனவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வான் படையிடம் தற்போது, 8 கிபீh ரக தாக்குதல் வானூர்திகள் உள்ள போதும் ஒரு வானூர்தி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மிக் 27 மற்றும் 23 வானூர்திகள் 8 என்ற எண்ணிக்கையில் இருந்தாலும் பயன்பாட்டில் ஒரு வானூர்தியே உள்ளது.

F7- B வானூர்திகள் 4 இருக்கின்ற  போதிலும் ஒரு வானூர்தியும் பயன்பாட்டில் இல்லை.

F7- S  வானூர்திகள் 4 என்கின்ற எண்ணிக்கையில் இருக்கின்ற போதிலும் 2 மாத்திரமே பாவனையில் உள்ள என அமைச்சர் குறிப்பிட்டார்.