ராஜஸ்தானில் வெள்ளப்பெருக்கு – பலர் பலி

585 0

School-Busராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் இதுவரை ஏழு பேர் பலியாகினர்.

பலியானவர்களில் ஆறு பேர் 8 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக சிட்டோகார், பில்வாரா மற்றும் பாலி ஆகிய மாவட்டங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மீட்பு பணிகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.