இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு சிறை விடுமுறை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
26 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு சிறை விடுமுறை வழங்குமாறு கோரி அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
26 ஆண்டு சிறை வாழ்க்கையில் 3 முறை அவருக்கு சிறை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக 2012ஆம் ஆண்டு 15 நாள் சிறை விடுமுறை பெற்றார்.
இந்தநிலையில் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் கடந்து விட்டதால், மீண்டும் சிறை விடுமுறை கேட்க உரிமை உண்டு என்ற அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், 1998 முதல் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட தண்டையானது இந்திய அரசியல் தந்தியல்லா தொழில்நுட்ப சட்டம் மற்றும் கடவுச் சீட்டு சட்டம் சார்ந்துள்ளது.
இந்த சட்டங்களில் கீழ் அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே அவர் சாதாரண விடுப்பு பெற தகுதியற்றவர் என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எனினும் விடுமுறை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

