ரஸ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு பல்வேறு வகையில் தீங்குகள் விளைவிப்பதால் அந்த நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது.
இது தொடர்பில் அமெரிக்க கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும்.
அதன்படி செனட் சபைக்கு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியது.
இந்த நிலையில், ரஸ்யா மீதான பொருளாதார தடைக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, இன்று செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை, பொருளாதார தடை மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

