பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம்

241 0

பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்­வோ­ருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்­ணிய பூமி­யான இந்த நாட்டில் நியா­ய­மான சமூ­கத்தை நோக்கி பய­ணிப்­ப­வர்கள் மாத்­தி­ரமே நிலைத்­தி­ருக்க முடியும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

குடும்ப ஆதிக்­கத்தை விதைத்து , ஆட்சி அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­தனர். இவர்கள் தற்­போது  113 ஆச­னங்­களை பெற்று பாரா­ளு­மன்­றத்தில் அதி­கார்தை நிரூ­பிக்க முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் ஜனா­தி­ப­தியின் ஆசிர்­வாதம் வேண்டும் என்­பதை அவர்கள் வேண்டும் என­லுவும் குறிப்­பிட்டார்.

ஹிங்­கு­ராங்­கொட வலய கல்வி அலு­வ­ல­கத்தின் புதிய கட்­டிட திறப்பு விழாவில் நேற்று திங்­கட்­கி­ழமை கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு கனவு கண்­டாலும் அதற்கு எனது  விருப்­பத்­தையும் ஆசீர்­வா­தத்­தையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­ப­தனை அனை­வரும் நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் 113 ஆச­னங்­களை பெற்­ற­பின்னர் அர­சாங்கம் கவிழ்ந்து ஜனா­தி­ப­தியை அப்­பு­றப்­ப­டுத்தி முடித்து விடலாம் என்று சிலர் கரு­து­கின்­றனர். இது குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும், முன்னாள் அமைச்­சர்­களும் தேசிய பத்­தி­ரிகை ஒன்­றுக்கு தெரி­வித்­துள்­ளனர். 113 ஆச­னங்­களைப் பெற்­றாலும் அர­சி­ய­ல­மைப்­புக்­க­மைய எவரும் ஜனா­தி­ப­தியின் ஆசீர்­வாதம் இன்றி புதிய அர­சாங்­கத்தை அமைக்க முடி­யாது.

நாட்டின் முன்­னேற்­றத்­துக்­கான தடை­களை அகற்றி தற்­போ­தைய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வெற்­று­கோ­ஷ­மி­டுவோர் நாட்டில் பல்­வேறு குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பொத மக்­களை திசைத்­தி­ருப்­பு­வதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது.

நாட்­டிற்­காக சிறந்த விட­யங்­களை முன்­னெ­டுத்து அவற்றில்  ஈடு­ப­டுடன் செயற்­ப­டு­ப­வர்கள் இருக்­கையில் , வெற்று கோஷ­மிட்டு குழப்­பத்தில் ஈடுப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சில ஊட­கங்­களில் இன்று சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­டு­கின்­றது.  இதன் கார­ண­மாக அர­சாங்கம் தொடர்பில் தவ­றான புரி­தலும் சில­ருக்கு போய் சேர்ந்து விடு­கின்­றது.

ஊழல், மோசடி, வீண்­வி­ரயம் மற்றும் குடும்ப ஆதிக்­கத்தை விதைத்­தனர். ஆட்சி அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்து நாட்டின் நாட்டின் நற்­பெ­யரை சிதைத்­தது மாத்­தி­ர­மன்றி தவ­றான பாதைக்கும் இட்­டுச்­சென்­றனர். சுதந்­திரம் மற்றும் ஜன­நா­ய­கத்தை பாது­காத்து சிறந்த நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு கிரா­மத்­தி­லி­ருந்து வந்த தலைவர் என்ற வகையில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கின்றேன். எனது தலை­மையில் தற்­போ­தைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை . பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்றார்.  .

Leave a comment