புகை­யி­ரத என்ஜின் ஓட்டுநர்கள் சங்கம் இன்று முதல் வேலை­நி­றுத்தம்

281 0

புகை­யி­ரத  என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம்  இன்று நள்ளி­ரவு 12 மணி தொடக்கம்  பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளது. 5 பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்தே இவர்கள் வேலை­நி­றுத்தப்போராட்­டத்தில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளனர்.

சீன என்ஜின் பொருத்­தப்­பட்ட புகை­யி­ர­தங்கள் மற்றும் எஸ்.10  என்ற இலக்­கத்­துக்­கு­ரிய என்ஜின் பொருத்­தப்­பட்ட புகை­ யி­ர­தங்கள் உள்­ள­டங்­க­லாக சகல புகை­யி­ர­தங்­க­ளையும் செலுத்தும் சேவை­க­ளி­லி­ருந்தும் விலகி நிற்­ப­தாக மேற்­படி சங்­கத்­தினர் தீர்­மா­னித்­துள்­ளனர்.

மேற்­படி சங்­கத்­தினால் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பை மேற்­கொள்வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள கார­ணத்­தினால் வழ­மை­யான ரயில் போக்­கு­வ­ரத்து சுற்­றுக்கள் 120 க்கும் அதி­க­மாக இடம்­பெ­றாது என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புகை­யி­ரத திணைக்­க­ளத்­திற்கு புதி­ய­வர்­களை இணைத்­துக்­கொள்­வதில் உள்ள சிக்­கல்­களை களைதல், போலி­யான கார­ணங்­களின் பேரில் சேவை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள புகை­யி­ரத சேவை­யா­ளர்­க­ளுக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுத்தல் உள்­ளிட்ட 5 கார­ணங்­களை முன்­வைத்தே இந்த வேலை­நி­றுத்தப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக ரயில் என்ஜின் ஓட் டுநர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கடந்த 21 ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது புதியவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்துவதாக கூறியிருந்தாலும் இன்று வரையில் அந்தச் செயற்பாடு நிறுத்தப் படவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave a comment