கஞ்சாவை சட்டபூர்வமாக பயன்படுத்த ஒப்புதல் 

370 0

புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கும் கஞ்சா போதைப் பொருளினை சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு முன்வரைவு ஒன்றினை அவர் முன்வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த ஆலோசனையில் சிறு மாற்றங்களைச் செய்த பின்னர் அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment