தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்

343 0

201608092354361459_Thailand-to-hold-elections-in-2017-junta-chief_SECVPFதாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கி உள்ளது. இந்த அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்தை அறியும் வகையில் நேற்று முன் தினம் நாடு முழுவதும் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் 5 கோடி வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

வாக்கெடுப்பில், அங்கு தேர்தல் நடத்த ஆதரவாக மக்கள் வாக்களித்தையடுத்து அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளரும் பிரதமருமான பிரயூத் சான் ஓ ஷா தெரிவித்தார். மேலும்,  அவர்  பொதுவாக்கெடுப்பு குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால், தேர்தல் நடைமுறைகள் வரும் 2017 ஆம் ஆண்டு  நடைபெறும் என்று மட்டும் தெரிவித்தார்.