பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் நடத்தப்படும், இலவச பற்சிகிச்சை முகாம் நடமாடும் சேவை இன்று ஆரம்பிக்கிறது.அதன்படி, இன்றையதினம் பசறை – கோணகலை தோட்ட வைத்தியசாலையில் இலவச பற்சிகிச்சை முகம் நடைபெறும்.
நாளையதினம் மடுல்சீமை இந்துகலாசார மண்டபத்திலும், நாளை மறுதினம் லுணுகலை அடாவத்தை தோட்ட வைத்தியசாலையிலும் இந்த இலவச முகாம்கள் நடைபெறவுள்ளன.
அத்துடன் இந்த சேவையானது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பதுளை மாவட்டத்தின் ஏனைய தோட்டப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 23 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமாரின் ஏற்பாட்டில், சுகாதார அமைச்சர் மற்றும் மாகாண சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறுகிறது.
இதற்காக இரண்டு பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் பற்சிகிச்சை வைத்தியசாலைகள் குறித்த பகுதிகளுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

