யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.நேற்றையதினம் யாழ் கொக்குவில் பொற்பதி பகுதியில் பொலிசாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு பொலிசாரையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பொலிசாருக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் கலந்துரையாலுடன் இவ்விடயம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கமைக்கப்பட்ருந்த பொலிசாருடனான கலந்துரையாடலையும் ஆரம்பித்து வைத்ததுடன் அதை தொடர்ந்து ஊடகங்களையும் சந்தித்து யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

