தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஹட்டனில்!

217 0

பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய தாய்பால் ஊட்டும் வாரம் இன்று (30) அட்டனில் ஆரம்பமாகியது 

சுகாதார போஷணை மற்றும் சுதேச அமைச்சினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .தாய் பால் ஊட்டுவதன் அவசியத்தை வழியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று ஹட்டன் மணிக்கூட்டு சந்தியிலிருந்து நகரின் பிரதான வீதியூடாக மல்லியப்பு சந்திவரை சென்று பிரின்ஸ் மண்டபத்தை சென்றடைந்து

நிகழ்வில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பழனி திகாம்பரம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பர்னான்டோபிள்ளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன். சிங்பொண்ணையா. சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்தத் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரத்தின் ஊடாக தாயப்பால் ஊட்டலின் உள்ள முக்கியத்துவத்தை மலையக மக்களும் உணர்ந்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கமாக அமைந்ததுடன் நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .
தோட்டப்பகுதி சகல சுகாதார வைத்திய அதிகாரிகளும் தோட்ட மருத்துவ உதவியாளர்களும் மருத்து தாதியர்களும் பெருந்தோட்ட பெண்கள் என கலந்து கொண்டனர்.

Leave a comment