வென்னப்புவ – வய்க்கால பகுதியில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 03.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பஸ் அனுராதபுரத்தில் இருந்து வெலிகடை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள நடனக் குழுக்களைச் சேர்ந்த 14 கைதிகள் இதன்போது, பஸ்ஸினுல் இருந்துள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

