தலவாக்கலை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாவா என அழைக்கப்படும் ஒரு தொகை போதைபொருள் இன்று (30) மதியம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரகசிய தகவல் ஒன்றினையடுத்து விரைந்த பொலிஸார் இந்த போதைபொருளை மீட்டுள்ளனர்.
தலவாக்கலை ஒலிரூட் தோட்டப் பகுதியில் போதைபொருளை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைபொருளின் தொகை 60 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

