யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட நடவடிக்கை ஆரம்பம்

345 0

University-of-Jaffna-3யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கலை பீடத்தின் ஆசிரிய சேவைக்கான இளங்கலைப் பட்டப்படிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இளங்கலைப் பட்டப்படிப்பின் 1ஆம், 2ஆம் 3ஆம் மற்றும் நான்காம் ஆண்டுகளுக்கான கல்விச் செயற்பாடுகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ராமநாதன் நுண்களை பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் புதிய பிரிவினருக்காக இந்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.