பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் கான் அப்பாஸி

287 0

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் கான் அப்பாஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

ஷாகித் கான் அப்பாஸி முன்னதாக பாகிஸ்தானின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக பதவிவகித்துள்ளார்.

பனாமா பத்திர விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷரீப் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த நாட்டு உயர் நீதிமன்றம் நவாஸ் ஷரீபை பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

Leave a comment