இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சுனில் சுப்ரமணியன்

274 0

இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சுனில் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மூத்தோருக்கான கிரிக்கெட் அணிக்கு பிரத்யேக முகாமையாளர் ஒருவர் இல்லாத நிலையில் இந்த புதிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விளையாடும்போது மாநில கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியில் ஒருவர் முகாமையாளராக செயல்பட்டுவருவதுடன், வெளிநாட்டின் சுற்றுப் பயணத்தின்போது மாநில சங்கங்களில் இருந்து ஒருவர் முகாமையாளராக நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்குகொண்டிருந்தபோது விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதுகுறித்து முகாமையாளர் விளக்கம் அளிக்கையில் இவருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் ஏற்படவியவில்லை என்று அறிக்கை அளித்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழுவிற்கு இந்த அறிக்கை திருப்தி அளிக்காத நிலையில், ஒரு வருடத்திற்கு நிரந்தரமாக முகாமையாளரை நியமனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்காக விளையாடிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்ரமணியம் என்பவர் நேற்று இந்திய அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறுவயது பயிற்சியாளர் ஆவார்.

அவர் இலங்கை அணியுடன் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் முகாமையாளராக இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment