உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் நீட் தேர்வு நடக்கிறது, இதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது. நீட் தேர்வை அரசியல் ஆக்கக்கூடாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் நீட் தேர்வு நடக்கிறது. இதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது.நீட் தேர்வை அரசியலாக்க கூடாது. மாணவர்களையும் இழுக்கக்கூடாது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் மத்திய அரசின் குப்பை தொட்டியில் கிடப்பதாக வைகோ கூறுகிறார். இது தவறானது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில்தான் நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் பயன் பெறுவார்கள்.மு.க.ஸ்டாலின் கைதுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு நாளில் அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதால் தான் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு கைது செய்தது.இவ்வாறு அவர் கூறினார்.

