சஞ்சய் தத்தின் நன்னடத்தையை இரண்டே மாதங்களில் கணித்தது எப்படி? – உயர் நீதிமன்றம் கேள்வி 

226 0

1993 மும்பை வெடிகுண்டு வழக்கில் 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தின் நன்னடத்தையை சிறை அதிகாரிகள் எப்படி 2 மாதங்களிலேயே கணித்தனர் என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மகாராஷ்டிர அரசு இதற்கு 2 வாரங்களில் விரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சிறைக்கைதிகளின் நன்னடத்தையை கணிக்கும் அளவு கோல்கள், சூழல்கள் என்னென்ன, நடிகருக்கு அவ்வளவு சீக்கிரம் நன்னடத்தைச் சான்றிதழ் அளித்தது எப்படி என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மே, 2013ல் தத் சரணடைந்தார் ஆனால் ஜூலை மாதமே அவர் பரோலில் விடுவிக்குமாறு மனு செய்தார்.

ஜூலை 8,2013-ல் அவர் விடுப்பு கோருகிறார், ஜூலை 25ல் பரோலில் செல்ல மனு செய்கிறார், இரண்டு மனுக்களுமே ஒரேசமயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சரணடைந்த ஒரு கைதியின் நன்னடத்தையை சிறை அதிகாரிகள் எவ்வாறு இரண்டே மாதங்களில் கணித்தனர்? சாதாரணமாக சிறை கண்காணிப்பாளர் இத்தகைய மனுக்களை பரிசீலனைக்குக் கூட அனுப்ப மாட்டார் என நீதிபதி குறிப்பிட்டார்.

Leave a comment