வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும் – முத்தரசன் 

380 0

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்றுள்ள, ‘வந்தே மாதரம்’ பாடலை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒருமுறையேனும் பாட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியல்ல.
இந்திய மக்களின் ஒற்றுமை மேலும் சிதைக்கவே உதவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கருதுகிறது.
பன்மைத்தன்மை கொண்ட சமூக இணக்கத்தின் மீது விழுந்த பேரிடியாகவே கருத வேண்டியுள்ளது.
வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பற்றிய வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது வழக்கிற்கு சம்பந்தமில்லாத விடயமாகும்.
இந்தத் தீர்ப்பு, ஏற்கெனவே சமுதாயத்தில் பிளவையும், விரோதத்தையும் விதைப்பவர்களுக்கு பெரும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்றே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment