வாரமொன்றுக்கு 8,000 டெங்கு நோயாளர்கள்

304 0

தற்பொழுது ஒரு வாரத்துக்கு 8,000 டெங்கு நோயாளர்கள் வரை பதிவு செய்யப்ப்டுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிமல்கா பண்ணில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தில் 105,000 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவற்றில் 44 வீதமானோர் மேல்மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும்.

இதேவேளை, தற்பொழுது 41 பொது சுகாதார பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment