அமைச்சர் பௌஸிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு

310 0

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒரு கோடி 95 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஜீப் வண்டியொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியன் ஊடாக அரசுக்கு நட்டம் விளைவித்ததாக லஞ்ச ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தொடர்பிலான  வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை இன்று (27) வழங்கியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட பௌஸி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்படி, முதலாம், இரண்டாம் சாட்சியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார்.

Leave a comment