நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் ஆகியோருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தில் முப்படையினரும் ஈடுபட்வுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டமானது 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் 29 ஆம் திகதி சனிக்கிழமையும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 திங்களிலும் குறித்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பித்துள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை பாடசாலையில் வழமையான கல்விச்செயற்பாடுகளுக்குப் பதிலாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் மற்றும்  பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ளோர் ஒன்றிணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.

இதுவேளை, குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முப்படையினர், காவற்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியினர் இணைந்து கொள்ளவுள்ளவுள்ளதுடன் சுகாதார அமைச்சும்  இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.