சாதாரண சட்டம் நடைமுறையில் இருப்பதாலேயே போராட்டங்கள் அதிகரித்துள்ளன

248 0
கடந்த காலங்களில் அவசரகால சட்டம் நடைமுறையில் காணப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருந்ததாகவும், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியினால்  அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு சாதாரண சட்டம் அமுலில் இருப்பதாலேயே ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற விவாதங்களில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த சாதாரண சட்டம் அமுலுக்கு வந்தப்பின்னர் சுமார் 1000 பணிபகிஸ்கரிப்புக்கள்,ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு அவசியமாக உள்ளதாலேயே ஹம்பாந்தோட்ட துறைமுகம் போன்றன குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும்,அன்றை ஆட்சியாளர்கள் துறைமுகம் போன்ற முக்கிய இடங்களில் தமது உறவினர்களுக்கு தொழி;வாய்ப்பை பெற்றுக்கொடுத்து அரச சொத்துக்களை விற்கும் போது இன்றை தேசாபிமானிகள் எங்கே சென்றனர் என்றும் பிரதி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றிய ஜனாதிபதிக்கு தமது நன்றிகளையும் தெரிவிப்பதாக பிரதி அமைச்சர் குறி

Leave a comment