இலங்கை வைத்தியசபையின் புதிய தலைவருக்கு எதிர்ப்பு

493 5
இலங்கை வைத்தியசபையின் புதிய தலைவராக விசேட சிறுவர் வைத்திய நிபுணரான கலாநிதி லமாபதுசூரியவை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர் சைட்டத்து ஆதரவானவர் எனத் தெரிவித்து இவரை அரச வைத்திய சபையின் தலைவராக நியமிப்பதற்கு அரச வைத்தியர்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரை காலமும் அரச வைத்திய அதிகாரிகள் சபையின் தலைவராக பதவிவகித்த கலாநிதி காலோ பொன்சேகா அண்மையில் ஓய்வுப்பெற்றுள்ள நிலையில்,குறித்த பதவி வெற்றிடத்திற்காக கலாநிதி லலிதா மெண்டீஸ்,வைத்தியர் பாலித அபேகோன், கலாநிதி கொல்வின் குணரத்ன உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment