பொலன்னறுவை-வெளிகந்த லும்பினி; ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெளிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்ணிவெடிகள் மற்றும் ஆர்.பி.ஜீ வர்க்க குண்டுகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை வடமத்திய மாகாண முதலமைச்சர் திறந்து வைக்கும் நிகழ்விற்காக பெற்றோர் பாடசாலை வளாகத்தை துப்பரவு செய்தபோதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடமானது கடந்த காலங்களில் இராணுவ காவலரணாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும்,எனவே இங்கு மேலும் பல வெடிப்பொருட்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பெற்றோர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வெடிப்பொருட்கள் குறித்து வெளிகந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

